விஜய்யிடம் மயங்கிய கீர்த்தி சுரேஷ்…? விஷயத்தை கசியவிடாமல் ரகசியமா வைத்திருக்கும் தளபதி?
Author: Shree4 July 2023, 3:52 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 90ஸ் பிற்பாதியில் தொடங்கி தற்போது வரை எட்டி பிடிக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். பிரபல இயக்குனர் S A சந்திரசேகர் அவர்களின் மகனும் ஆவார். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவரது திரைப்படங்கள் வெளியானாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.
சமீப காலமாக, விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. காரணம், நடிகர் விஜய் திரைப்பட விழா, ஆடியோ வெளியீட்டு விழா, பிரபலங்களின் திருமணம் எது என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார்.
ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும், வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் தனது மனைவியை அழைத்து வரவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபட்டது. அதன் பிறகு ஒரு நிகழ்ச்சிக்கும் தன் மனைவியை அவர் அழைத்து வருவதே இல்லை. இதனால் விவாகரத்து செய்தி தீயாய் பரவியது. மேலும், கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்னரே விஜய்யின் தீவிர ரசிகை. இருவரும் சேர்ந்து பைரவா படத்தில் நடித்திருந்தனர்.
அப்போது அவரது நடனத்தை பார்த்து மயங்கிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். இதனிடையே காதல் கிசு கிசு பற்றி பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, அதெல்லாம் உறுதி படுத்தாத தகவல். காதல் இருக்குமோ என்ற சந்தேகம் கூட இல்லாத அளவுக்கு தான் இருவரும் இருந்து வருகிறார்கள். அப்படியிருந்திருந்தால் வாரிசு , லியோ படத்தில் கீர்த்தி சுரேஷையே தனக்கு ஜோடியாக போட்டுக்கொண்டிருக்கலாமே? எனவே அதெல்லாம் சும்மா கட்டுக்கதை. அப்படி எதுவும் நடத்திட கூடாது என அவர் அந்த பேட்டியில் கூறினார்.