அந்த விஷயத்தில் தனுஷை கடைபிடிக்கும் விஜய்… பிரபல நடிகைகளுடன் அடிக்கடி ரகசிய சந்திப்பு: முற்றுப்புள்ளி வைப்பாரா?

Author: Vignesh
26 August 2023, 12:00 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

ஏற்கனவே திரிஷா விஜய் காதல் கிசுகிசுக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது லியோ படத்தினால் அது மீண்டும் துளிர்விட்டு எழுந்துள்ளது. ஆம், அவ்வப்போது திரிஷா விஜய் ஜோடியாக மஜா பண்ணும் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி விடுகிறது.

சமீபத்தில் இருவரும் சேர்ந்து Oslo Norway’வுக்கு வெகேஷன் சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி கிசுகிசுப்பட்டது. விஜய் லண்டனுக்கு மாமியார் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு திரிஷாவுடன் ஜாலி வெகேஷன் சென்றுள்ளார் என செய்திகள் வெளியானது.

vijay sangeetha - updatenews360

இதற்கிடையில், அரசியல் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். அதாவது மனைவி சங்கீதா விஷயத்தில் விவாகரத்து செய்துவிட்டார் என்றும், கீர்த்தி சுரேஷ் உடன் திருமணம் என்றும், இணையதளத்தில் முன்னதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுகிறது.

keerthy suresh-updatenews360

தற்போது, அதை உறுதி செய்யும் விதமாக விஜய் கீர்த்தி சுரேஷ் குறித்த வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில், விஜய் சங்கீதா திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகிய நிலையில், விஜய் மனையுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது இருவரும் ஜோடியாக வெளியில் சென்ற எந்த சம்பவமும் இன்னும் எதும் வெளியாகவில்லை.

இப்படி கீர்த்தி சுரேஷ், த்ரிஷா என்று நடிகையுடன் ஜாலியாக இருந்த விஜய் மனைவியுடன் ஜோடியாக அவுட்டிங் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த ஆண்டு 25 வது திருமண நாளில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 430

    1

    2