விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2024, 6:22 pm

நடிகர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் லிப்ட் ஒன்றில் தனியாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து, திரைத்துறையைச் சேர்ந்த அந்தணன் இதுகுறித்து பேசிய வீடியோவும் இணையத்தில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் அந்தணன் கூறியதாவது: “இதுபோன்ற விஷயங்களை நாம் ஆழமாக ஆராய முடியாது. ஆனால் விஜய்யுக்கும் த்ரிஷாவுக்கும் இடையில் சினிமா எல்லையைத் தாண்டி ஏதோ ஒன்று உள்ளது என்று திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதனால்தான், த்ரிஷா எதையும் சமூக வலைதளங்களில் பதிவிடும் போதெல்லாம் அது பெரும் விவாதமாக மாறுகிறது.

திரைத்துறையில் ‘நெருப்பு இல்லாமல் புகையாது’ என்ற நிலை உள்ளது. ஏற்கனவே இப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை உண்மையாக மாறியுள்ளன. இந்த சூழலில், இப்படியான விவாதங்களை விஜய்யும் எதிர்பார்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இதையும் படியுங்க : இன்னொரு திருமணம் செய்வதில் தப்பே இல்லை : பகீர் கிளப்பிய நயன்தாரா!

அவருக்கு வேண்டுமென்றால், த்ரிஷாவிடம், ‘பொதுவெளியில் வாழ்த்த வேண்டாம், தனிப்பட்ட முறையில் போன் மூலம் சொல்லுங்கள்’ என்று கூற முடியும். ஆனால் இவ்வாறு பொது வெளியில் த்ரிஷாவின் வாழ்த்துகளை அனுமதிப்பதன் மூலம், இருவரின் உறவை மெல்லமெல்ல வெளிப்படுத்த நினைக்கின்றார் போலும்.”

இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. அதோடு, விஜய் தொடங்கிய நிகழ்வுகளில் அவரது மனைவி கலந்து கொள்ளாதது மற்றும் அது சந்தேகங்களுக்கு வழிவகுத்தது என்பதும் மீண்டும் பேசப்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு விஜய்யும் த்ரிஷாவும் தனி விமானத்தில் பயணம் செய்தது குறித்து வெளியான வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் அரசியல் செல்வாக்கை எதிர்க்க விரும்பும் சிலர் திட்டமிட்டு இவ்வாறான கருத்துக்களை உருவாக்கி வெளியிடுகிறார்கள் என்றும், விஜய்யின் உண்மையான ரசிகர்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!