விஜய்யிடம் இருந்து விலகி இருங்க… திரிஷாவுக்கு அட்வைஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2024, 12:56 pm

விஜய் திரிஷா குறித்து ஏகப்பட்ட வதந்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இருவரும் தொடர்ந்து 20 வருடங்களாக படங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

அதே போல சமீபத்தில் வெளியான கோட் படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா குத்தாட்டம் போட்டிருந்தார். இதுவரை அவர் கதாநாயகியாக நடித்திருந்த நிலையல் விஜய்க்காக அந்த படத்தில் குத்தாட்டம் ஆடியிருந்தார்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “லியோ” படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் நடிகர் விஜய்யுடன் நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தின் கீழ், விஜய்யின் ஒரு ரசிகை கருத்து தெரிவித்துள்ளார். அந்த ரசிகை தனது கருத்தில், “விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வேண்டாம். அவருடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற கூடாது” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்க : நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்.. சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூன் உருக்கம்!!

மேலும் மற்றொரு கருத்தில், அதே ரசிகை, நீங்கள் இப்படி புகைப்படங்கள் பகிர்வதால், விஜயின் ரசிகர்கள் வதந்திகளை கிளப்புகிறார்கள். தயவுசெய்து விஜய்யிடம் இருந்து கொஞ்சம் தள்ளி இருங்கள். இதை ஒரு பெண்ணாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Vijay and trisha

நேற்றைய உங்கள் பதிவே தற்போது வைரலாகிவிட்டது. தனியாக பயணம் செய்ய பணமில்லையா? ஏன் விஜய்யுடன் மட்டும் பயணிக்க வேண்டும்? நான் விஜய் ரசிகராக இத்தகைய கேள்விகளை உங்களிடம் கேட்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!