ஒழுங்கா ஓடி போயிரு.. வடிவேலுவால் அவமானப்பட்ட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்..!
Author: Vignesh28 September 2023, 2:15 pm
தமிழ் சினிமாமவில் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். இவருடன் நடிக்க நடிகைகள் போட்டி போடுவதுண்மடு.
பெரும்பலும் ஹிட் படங்கள் மட்டும் கொடுக்கும் விஜய், ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுக்க தடுமாறினார். எத்தனையோ படங்கள் வந்தாலும், அவருடைய காதல் திரைப்படங்கள்தான் இன்னும் நம் கண்முன்னே நிற்கும்.
அதில் ஒன்றுதான் துள்ளாத மனமும் துள்ளும். அருமையான காதல் கதையை அழகாக எடுத்திருப்பார் இயக்குநர் எழில்.
இந்த படம் சாரில் சாப்ளின் படத்தின் City Lights படத்தின் தழுவல் என்றாலும், கதைக்காக நிறைய காட்சிகள் மாற்றப்பட்டது.
இந்த படத்தின் பெயர் முதலில் ருக்மணிக்காக என இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி துள்ளாத மனமும் துள்ளும் என மாற்றினார்.
வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் பின்னர் விஜய்தான் கமிட்ஆனார். இதற்காக படத்தினை ஆரம்பிக்க பல தயாரிப்பாளர்களிடம் சென்று கதை கூற, ஒழுங்கா ஓடி போயிரு.. ஹீரோ வடிவேலுவா என்று கூறி கழுத்தை பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்களாம். அதன்பின் சூப்பர் குட் ப்லிம்ஸ் ஆர் பி செளத்ரியிடம் கதையை கூற, அவர் கேட்டு அதை விஜய்யிடம் சொல் என்று அனுப்பி வைத்திருக்கிறார். விஜய்யும் கதையை கேட்டு ஓகே சொல்ல படமும் வெளியாரி விஜய் கேரியரின் பெஸ்ட் படமாக நின்றது.