பெரிய விசில் அடிங்க…. IPL Final Match கதை தான் தளபதி 68 – வெறித்தனமா வந்திறங்கிய டைட்டில்!

Author: Shree
6 June 2023, 10:00 am

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் யார் ஹீரோயின்? யார் வில்லன்? என்ன கதை என நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பினை மீறிய ஒரு மாசான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது வெங்கட் பிரபு படம் என்றாலே அதன் பின்னணியில் Game, Sixer, Reunion, Politics, Diet, Holiday, Hangover, Quickie, Hunt போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கும்.

அந்த வகையில் தற்போது இந்த படத்திற்கு அவர் “CSK” என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வெங்கட் பிரபு ஏற்கனவே சென்னை 28 திரைப்படத்தை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்திருந்தார். மேலும் அவர் மிகப்பெரிய CSK டீம் ரசிகன். விஜய்யும் சென்னை சூப்பர் கிங் ரசிகர் என்பதால் அதையே டைட்டிலாக வைத்துள்ளார்கள். எனவே இப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் மையப்படுத்தி IPL மேட்ச் குறித்து இடையிடையே பேசப்படலாம் என எதிர்பார்க்கலாம். இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் டபுள் தமாக்கா குஷியில் உள்ளனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!