முந்திரிக்கொட்டை… லியோ Flop ஆச்சுனா அதுக்கு காரணமே நீ தான்…. வெங்கட் பிரபுவை பயங்கரமா திட்டிய விஜய்!

Author: Shree
7 June 2023, 1:14 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்மையில் கூட இப்படத்தின் டைட்டில் CSK என்றும் இது கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், இதில் விஜய்க்கு சம்பளம் ரூ. 200 கோடி என்றும் செய்திகள் வெளியானது. லியோ படத்தில் நடித்து முடிப்பதற்குள்ளேயே வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தின் அன்னவுன்ஸ்மெட் அறிவித்ததால் லியோ மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் குறைந்துவிட்டதாம். இதனால் அப்படத்தின் பிசினஸ் அடிவாங்கியுள்ளது.

இதனால் லோகேஷ் செம கடுப்பாகி வெங்கட் பிரபு ஏன் இப்படி செய்தார்? என விஜய்யிடம் ஆதங்கத்தை கொட்டிதீர்த்துள்ளார். அதன் பின்னர் விஜய் வெங்கட் பிரபுவை அழைத்து, அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்? என பயங்கரமாக திட்டிவிட்டாராம். இனிமேல் என்னிடம் கேட்காமல் எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடக்கூடாது. அப்படி செய்தால் உன்னை தூக்கிவிட்டு வேறு இயக்குனரை பார்க்கவேண்டியிருக்கும் என கறாராக கூறிவிட்டாராம். இதனால் வெங்கட் பிரபு கொஞ்சம் அடங்கி இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 448

    1

    1