மரியாதையா செல்றேன் இங்கிருந்து போயிடுங்க… ரசிகர்களிடம் கோபப்பட்ட விஜய்?
Author: Shree11 April 2023, 7:29 pm
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கைதி , மாஸ்டர் , விக்ரம் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார்.
ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றதை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள்.
அதன் படி இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை அறிந்ததும் விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக அங்கு கூடியுள்ளனர். இதனால் படக்குழுவுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
செக்கியூரிட்டிகள் எவ்வளவோ சொல்லியும் காது கொடுத்து கேட்காத விஜய் ரசிகர்கள் அங்கு கூச்சலிட்டு கத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு நடத்தவே முடியாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விஜய் தன் ரசிகர்கள் மீது மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். மேலும், அவர்கள் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம் விஜய்.
இதனால் சென்னையில் படப்பிடிப்பு நடத்தவே வேண்டாம் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து படக்குழு ஆலோசித்து சென்னைக்கு பதிலாக ஹைதராபாத்தில் ஷூட்டிங் எடுக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.