மகளின் மரணம்..”குழந்தைகளை ஃப்ரீயா விடுங்க”.. தற்கொலை குறித்து உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி..!
Author: Vignesh19 September 2023, 9:45 am
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.
இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பிலும் , இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், விஜய் ஆண்டனியின் மகள் லீரா (16) இன்று விடியற்காலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மகள் லீரா பள்ளியில் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு படுக்கையறைக்கு உறங்க சென்ற லீரா தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து விஜய் ஆண்டனி அதிர்ந்துப்போய் காவேரி மருத்துவமனைக்கு மகளை கொண்டுசென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில், தற்கொலை எண்ணம் குறித்து பேசி உள்ளார். அதாவது நிறைய பேருக்கு அந்த எண்ணம் வருகிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். பணத்தினால் பலருக்கு அந்த எண்ணம் வருகிறது. மற்றவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை ஏமாற்றத்தில் முடியும்போது அந்த எண்ணம் வருகிறது. குறிப்பாக படிப்பினால் மாணவர்களுக்கு பிரஷர் கூடுகிறது. பள்ளி முடிந்து உடன் டியூஷன் போ, அதுபோ என அவர்களை நாம் ஒரு இயந்திரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிக பிரஷர் கொடுக்கிறாங்க. பிள்ளைகளை ஃப்ரியா விடுங்க என பேசி உள்ளார்.