சத்யா கொலை..! – முதல் ஆளாக குரல் கொடுத்த விஜய் ஆண்டனியின் அதிரடி ட்வீட்.. ஆடிபோன நெட்டிசன்கள்..!

Author: Vignesh
14 October 2022, 6:45 pm

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பாடகர், எடிட்டர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆகிய பன்முகங்களையும் கொண்டுள்ளார்.

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து அக்னி சிறகுகள், தமிழரசன், ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Vijay_Antony_updatenews360

மேலும் பிச்சைக்காரன் 2, காக்கி, கொலை, மழை பிடிக்காத மனிதன்,ரத்னம், ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ள பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.

அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

” சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!