“உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்”…. விஜய் ஆண்டனி மகள் எழுதிய உருக்கமான கடைசி கடிதம்!

Author: Shree
19 September 2023, 9:13 pm

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.

இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பிலும் , இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று இவரது மகள் மீரா இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது மரணத்திற்கு காரணம் மன உளைச்சல் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் இந்நோய்க்காக கடந்த 6 மாத காலங்களாக சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீரா இறப்பதற்கு முன் கடைசியாக எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், மீரா ‘ஐ லவ்யூ ஆல். மிஸ் யூ ஆல்’ என்று உருக்கமாக எழுதியுள்ளார். 10 வரிகள் கொண்ட அந்த கடிதத்தில் தனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார். இந்த கடிதம் மீரா மன அழுத்தத்தில் இருந்தபோது எழுதினாரா? அல்லது தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னர் எழுதினாரா என்பது தெரியவில்லை. னர்.

  • 500 crore collection news all are fake said by sundar c 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்