விஜய் ஆண்டனி மகள் தற்கொலை.. மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

Author: Vignesh
22 September 2023, 5:15 pm

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற நிலையில், அவருடைய தந்தை அறையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக மன அழுத்தம் இருந்து வந்ததாகவும், அதற்காக அவர் சிசிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு என்ன மன அழுத்தம் இருக்கப் போகிறது என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இவருடைய மரணத்திற்கு மன அழுத்தம் தான் காரணம் என்று தகவல்கள் வெளியான நிலையில், பல மருத்துவர்கள் இதுகுறித்து விரிவான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் பிரபல மருத்துவர் ஒருவர் தன்னுடைய youtube பேட்டியில், விஜய் ஆண்டனி மகள் இறந்ததற்கு காரணம் மன அழுத்தம் என்றாலும், கூட அதைவிட மிகப்பெரிய ஒரு காரணமும் இருக்கிறது எனது தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது குழந்தைகளை கவனித்துக்கொள்வது பெற்றோர்களோட தலையாய கடமையா இருக்கு, அப்படி இருக்கும்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லக்கூடிய அந்த பெண்ணை தனியறையில் தங்க அனுமதித்தது மிகப்பெரிய தவறு. அவர் உடனே ஒரு விபரீத முடிவுக்கு சென்றிருக்க மாட்டார்.

அவங்க உடனே அந்த தற்கொலை முடிவு எடுத்திருக்க மாட்டாங்க சோகத்துல இருந்து இருப்பாங்க, அழுது இருப்பாங்க.. புலம்பி இருப்பாங்க.. அப்படியான நேரத்துல விஜய் ஆண்டனி குடும்பத்துல இருக்குற யாராவது ஒருத்தர் அவர் கூட இருந்து இருக்கணும் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார். என்ன விஷயம்னு அவர்கிட்ட மனம் விட்டு பேசி இருக்கணும். அவங்களோட பிரச்சனையை கண்டறிஞ்சு அதை சரி செய்ய முயற்சி பண்ணி இருக்கணும்.

அவரை வெளியில அழைச்சிட்டு போயிருக்கணும், அதை எல்லாத்தையும் விஜய் ஆண்டனியும், அவரோட குடும்பத்தை சேர்ந்தவர்களும் செய்யாமல் விட்டதால தான் அந்த பெண் தனியா இருந்ததால மட்டும்தான் மிகப்பெரிய பிரச்சினையா இது மாறி இருக்கு, கொஞ்ச நாளாவே ஒரு சில வீடுகளில் தனி அறை, தனி தொலைக்காட்சி, தனி மொபைல்போன், தனி கம்ப்யூட்டர் என்று குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.

வசதி இருக்குதுங்கறதால இப்படி செய்யறதால குழந்தைகளை தனித்து விட்டுறாங்க அதனால, சமூகத்துடன் கூட மட்டுமில்லை தங்களுடைய குடும்பத்துடன் கூட குழந்தைகள் ஒட்டாம இருக்குறாங்க.. அப்பா, அம்மா, பாட்டி உயிருக்கு உயிரான பாசம், பந்தம், சொந்தம் இந்த மாதிரி எந்த ஒரு விஷயங்களையும் அவங்களுக்கு தெரியாம போயிடுது குழந்தைகளை தனிமைப்படுத்துற எந்த விஷயத்தையும் பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது.

குழந்தைகளோட ஒவ்வொரு நடவடிக்கையும் பெற்றோர்கள் கண்டிப்பா கவனிச்சிட்டு வரணும், எந்த பிரச்சினையினாலும் அப்பா, அம்மா கிட்ட சொன்னா சரியாயிடும் அப்படிங்கற நம்பிக்கையை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கணும். அதை விட்டுட்டு அப்பா, அம்மாவுக்கு தெரிந்த அவ்வளவுதான் அப்படிங்கிற பயத்தை குழந்தைகளுக்கு வர விடக்கூடாது என்று பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ