விபத்தில் சிக்கி பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் முகமே மாறிய விஜய் ஆண்டனி.. – வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh4 May 2023, 12:31 pm
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்கூட்டர் போட் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் ரிக்ஸ் எடுத்து நடித்தாராம் விஜய் ஆண்டனி. இந்த சமயத்தில் தான் விஜய் ஆண்டனிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஸ்கூட்டர் போட்டில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் அவர் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார்.
தண்ணீரில் இருந்து வெளியே வந்த விஜய் ஆண்டனி மூச்சு விடவே கஷ்ப்பட்டாராம். இதன்பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ICUவில் அனுமதித்துள்ளனர்.
முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள விஜய் ஆண்டனி தற்போது சிகிச்சைக்கு பின் நன்றாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவருக்கு தாடை மற்றும் மூக்கில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.
பிரபல மருத்துவமனையில் அவருக்கு தாடை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பல்வேறு சர்ஜரிக்கு பிறகு குணமடைந்து திரும்பி இருக்கிறார்.
இதனிடையே, விபத்துக்கு பிறகு முதல் முறையாக விஜய் ஆண்டனி இன்று பிச்சைக்காரன் 2 படத்தின் பிரெஸ் மீட்டுக்காக வந்திருக்கிறார். மூக்கு மற்றும் தாடையில் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் அவரது முகமே மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.