விஜய் ஆண்டனி தந்தையும் தற்கொலை.. வாழ்க்கையில் தொடரும் சோகம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
Author: Vignesh19 September 2023, 12:42 pm
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.
இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பிலும் , இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய் ஆண்டனி பாத்திமா என்ற பெண்ணை கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு “லீரா” என்ற 16 வயது மகள் இருக்கிறார். இவர் சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில், மன உளைச்சசல் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது உடல் காவேரி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு சிகிச்சை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து அவரது மரணத்திற்கு என்ன காரணம். யார் யாரெல்லாம் அவரது மரணத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். அவரது நண்பர்கள், செல்போன், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார். பிரேத பரிசோதனைக்கு பின் சரியாக 10 மணிக்கு விஜய் ஆண்டனியிடம் மகளின் உடல் ஒப்படைக்கப்படும் என செய்திகள் கூறுகிறது. அதன் பின்னர் சரியாக 12 மணிக்கு லீராவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட இந்த நேரத்தில் தனது தந்தை குறித்து அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில், தனது தந்தை தனக்கு 7வயது இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார். வாங்காத கடனுக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என விஜய் ஆண்டனி மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.
He Lost his dad at 7 [commited suicide]
— Troll Mafia (@offl_trollmafia) September 19, 2023
Now Lost his daughter [Commited Suicide]
Why is God so cruel to a kind-hearted person like #VijayAntony? 💔 pic.twitter.com/olUMtYUpLi
பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் ஆண்டனிக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள். மேலும், விஜய் ஆண்டனியின் மகள் தாத்தாவைப் போலவே தற்கொலை செய்து கொண்டு மரணித்திருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த பெரும் துயரத்தில் இருந்து விஜய் ஆண்டனி மீண்டு வர தேவையான சக்தியும் மனவலிமையும் அவருக்கு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.