தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து அதன் பின்னர் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் தான் விஜய் ஆண்டனி. இவர். 2000ம் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசை அமைப்பாளராக இருந்து வந்தார்.
2005 ஆம் ஆண்டு வெளிவந்த சுக்கிரன் திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
முதன் முதலில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் நான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சலீம், சைத்தான் ,திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: சும்மா அதிருதில்ல… ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் “வேட்டையன்” – இத்தனை கோடியா?
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்… நடிகர் விஜய் ஆண்டனி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை என்ற ரியாலிட்டி ஷோ நடுவராக விஜய் ஆண்டனி களமிறங்கி இருக்கிறார்.
அவருடன் நடிகை சரிதா மற்றும் அபிராமியும் களம் இறங்குகிறார்கள். அதற்கான புரோமோவில் விஜய் ஆண்டனி பேசிய விஷயங்கள் தான் தற்போது மக்களை கவர்ந்து வருகிறது. மகா நடிகை ஷோவின் மூலம் விஜய் ஆண்டனி முதல் முதலாக தொலைக்காட்சியில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.