மகள் மறைவுக்கு பின் செகண்ட் இன்னிங்ஸ்…. இசை கச்சேரியில் ஆர்வம் காட்டும் விஜய் ஆண்டனி – எப்போ தெரியுமா?

Author: Shree
9 October 2023, 5:29 pm

90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது. நாகர்கோவிலை சேர்ந்த இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.

இப்படியான நேரத்தில் தான், கடந்த 19ம் தேதி மூத்த மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மிகுந்த வேதனைக்குள்ளாகியது. இந்நிலையில் மகள் மீரா மறைவுக்கு பின் தன்னை மிகவும் பிஸியாக வைத்துக்கொள்கிறார் விஜய் ஆண்டனி.

குறிப்பாக முழு கவனமும் இசை மீது உள்ளது. ஆம், திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டும் அல்லாமல் பாட்டு கச்சேரிகளை நடத்தி வருகிறார். முதல் கச்சேரி வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து அடுத்த கச்சேரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 29ம் தேதி மலேசியாவில் விஜய் ஆண்டனியின் மாபெரும் இசைக் கச்சேரி நடத்தவுள்ளார். இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி