ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டையால் நொந்து போன விஜய் ஆண்டனியின் பதிவு..!

Author: Vignesh
20 April 2024, 2:58 pm

90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார். அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது.

vijay antony

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

சமீபத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளிவந்தது. நகைச்சுவை கலந்த காதல் கதை களத்தில் உருவான இந்த படத்தை விநாயக வைத்தியநாத இயக்கியுள்ளார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் மிர்ணாளினி ரவி, விடிவி கணேஷ், இளவரசு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

vijay-antony

மேலும் படிக்க: பல பேருடன் தொடர்பு.. அதிக பண தேவை இருந்துச்சு; எமோஷனலாக பேசிய ரேஷ்மா பசுப்புலேட்டி..!

இந்நிலையில், திரைப்படங்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் ரோமியோ படத்தை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ஆண்டனி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொள்ளும் ப்ளூசட்டை மாறன் போன்ற சிலருக்கு இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என் அன்பு மக்களே. ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும், ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று விஜய் ஆண்டனி அந்த பதிவில் கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 217

    0

    0