கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வரும் திரைப்படம் தான் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்த திரைப்படத்தை கோலிசோடா கடுகு போன்ற திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குனரான “விஜய் மில்டன்” தான் இயக்கியுள்ளார்.
கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பத்து என்றதுக்குள்ள” இந்த திரைப்படம் வெளியாகி நல்ல கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் பெற்று வருகிறது. அதை எடுத்து தற்போது “மழை பிடிக்காத மனிதன்” என்ற திரைப்படத்தை இவர் இயக்கி இருந்தார் . இந்த திரைப்படம் வெளியாகி சுமாரான விமர்சனங்களை மட்டுமே பெற்று வந்தது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி முதல் நாளிலேயே பத்திரிக்கையாளர் காட்சியை பார்த்த விஜய் மில்டன் மழை பிடிக்காத மனிதனில் நாயகன் யார் எங்கிருந்து வந்திருக்கிறார் என்கிற கேள்விகளை வைத்தே இந்த படத்தை நான் எடுத்திருந்தேன். அந்த கேள்விகளாலே இக்கதையை உருவாக்கியும் வைத்திருந்தேன். இப்போது படத்தை பார்க்கும்போது நாயகன் யார் என்கிற ஒரு நிமிட காட்சியை படத்தின் ஆரம்பத்திலேயே யாரோ சேர்த்து இருக்கிறார்கள்.
இப்படி காட்சியை சேர்த்தால் பார்ப்பவர்களுக்கு என்ன சுவாரசியம் இருக்கும் தணிக்கைக்கு சென்ற பிறகு வெளியிட்டிருக்கும் முன்பு இந்த காட்சியை யாரோ இணைத்திருக்கிறார்கள். இயக்குனரை கேட்காமல் இப்படி செய்ததற்காக என்ன சொல்வது என்றே தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள் தயவு செய்து அந்த முதல் ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டுப் பாருங்கள் என கூறியிருந்தார்.
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஒரு இயக்குனருக்கே தெரியாமல் இரண்டு நிமிட காட்சி யார் எடுத்து வைக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இயக்குனரின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு விளக்கம் கொடுத்திருக்கும் நடிகர் விஜய் ஆண்டனி, ஐயோ! அது நான் இல்லைங்க மழை பிடிக்காத மனிதன் படத்தில் தான் ஒப்புதல் இல்லாமல் இரண்டு நிமிட காட்சியை யாரோ இணைத்துள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் “அது நான் இல்லை” என படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும், அது நான் இல்லை…. இது சலீம் 2 இல்லை என செய்தி வெளியிட்டு இருக்கிறார்.