SK-25 பராசக்திக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்…விஜய் ஆண்டனி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…கதி கலங்கும் சிவகார்த்திகேயன்.!

Author: Selvan
29 January 2025, 6:52 pm

பராசக்தி டைட்டிலுக்கு கடும் போட்டி

இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்பு நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி.

இதையும் படியுங்க: புரட்சியை கையில் எடுத்த சிவகார்த்திகேயன்…சுதா கொங்கரா இயக்கும் SK 25 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு..!

இவர் தற்போதும் பல படங்களில் இசையமைத்து நடித்தும் வருகிறார்.இந்த நிலையில் இவருடைய 25 வது படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியே இப்படத்தை தயாரிக்கிறார்.இப்படம் ஒரு பான் இந்திய படமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்திற்கு 1952 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், கருணாநிதி திரைக்கதையில்,சிவாஜிகணேசன் முதன்முதலில் நடித்து வெளிவந்த திரைப்படமான பராசக்தி பட தலைப்பை வாங்கியுள்ளார் .விஜய் ஆண்டனி இதற்காக பராசக்தி டைட்டில் உரிமையை ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து சட்டப்படி பெற்றுள்ளார்.

SK 25 Parasakthi title issue

அதன் அடிப்படையில் தமிழில் இப்படத்திற்கு சக்தித் திருமுகமன் என்றும்,பிற மொழிகளில் பராசக்தி என்றும் படத்தின் தலைப்பை வைத்துள்ளார்,இதற்கான போஸ்டரும் இன்று வெளியானது.ஆனால் அதே டைட்டிலை SK 25 படத்திற்கும் படக்குழு வைத்துள்ளதால்,தற்போது குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இதனால் விஜய் ஆண்டனி தன்னுடைய X-தளத்தில் பராசக்தி டைட்டில் வாங்கிய உரிமை சான்றிதழை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கடந்த வருடம் ஜூலை 22ஆம் தேதி பராசக்தி தலைப்பை பதிவு செய்துள்ளார்.இதனால் தற்போது SK-25படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ