தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.
இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பிலும் , இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. விஜய் ஆண்டனியின் மகள் லீரா (16) நேற்று விடியற்காலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மகள் லீரா பள்ளியில் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், படிப்பிலும், பிற நடவடிக்கைகளிலும் மீரா சிறந்து விளங்கிவந்தவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது இந்த காணொளி. தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே, இன்று காலை இறுதி சடங்குகள் முடிந்த பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர். அப்போது கடைசியாக தனது மகளிடம் “கருவறையில் உன்னை சுமந்தேன்.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்” என விஜய் ஆண்டனியின் மனைவி கதறி அழுதார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.