எந்த நடிகரும் இப்படி பண்ணல… விஜயகாந்த் உடலை பார்த்ததும் விஜய் ஆண்டனி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் (வீடியோ)

Author: Rajesh
31 December 2023, 5:12 pm

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

ஆனால், அவர்கள் அத்தனை பேரை காட்டிலும் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் செயல் அனைவரையும் நெகிழ செய்தது. ஆம், விஜய் ஆண்டனி மாலை அணிவித்து விஜயகாந்த் உடலை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். பின்னர் அவரது முகத்திற்கு முத்தமிட்டு கண்கலங்கிப்படி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அந்த ஐஸ் பாக்சின் மீதிருந்த உதிர்ந்த பூ இதழ் ஒன்றை எடுத்து தன் சட்டை பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் அருகில் நின்று அழுதுக்கொண்டிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தை பார்த்து அவரது கைகளை பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறினார். விஜய் ஆண்டனியின் இந்த உணர்ச்சிமிக்க செயல் அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கூட்டத்தில் இருந்த அனைவரும் அவர் முத்தமிட்டதை பார்த்து கைதட்டினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக எந்த ஒரு நடிகரும் இதுபோன்று செய்யவில்லை என பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  • Vijay TV couple Decides Honeymoon in the Amazon forest கல்யாணம் முடித்த கையோடு காட்டுக்குள் ஹனிமூன்…. விஜய் டிவி ஜோடியின் விசித்திர முடிவு!