தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் ஆரம்பத்தில் தனது அப்பாவின் உதவியால் இந்த உயரத்தை எட்ட முடிந்தது. விஜய்க்கு ஆரம்பத்தில் அவர் தான் கதைத்தேர்வு செய்வராம். இந்த கதை ஓகே என்றால் அதில் நடிப்பாராம் விஜய். அந்த அளவிற்கு விஜய்யை பார்த்து பார்த்து சினிமாவில் நடிக்க வைத்து உச்சத்தை தொட வைத்துள்ளார் அப்பா SAC.
விஜய்யின் வெற்றிக்காக என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்தாராம். விஜய்க்கு பாரதிராஜா போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வீட்டு வாசலில் காத்துக்கிடந்த சம்பவமெல்லாம் நடந்துள்ளது. இயக்குனர் ஷங்கரிடம் கூட மகனுக்கு நல்ல வாய்ப்பு ஒன்னு கொடுங்க என கேட்டுள்ளார்.
அப்போதெல்லாம் தானே ஒரு இயக்குனர் என்றாலும் கூட பெரிய இயக்குநர்களின் படங்களில் மட்டும் மகனை நடிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டாராம்.
முன்னதாக, தெலுங்கில் 1996ல் வெளிவந்த படம் தான் பவித்ர பந்தம். இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். பவித்ர பந்தம் படத்தை பார்த்த விஜய்யின் தந்தை SAC படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். படத்தை விஜய்க்கு போட்டு காட்டி உள்ளார். ஆனால், விஜய் இது ஹீரோயின் சப்ஜெக்ட் படமாக இருக்கிறது ஓடாது என தெரிவித்து வேண்டா வெறுப்பாக பின் தனது தந்தையின் பேச்சை மீறமுடியாத காரணத்தினால் அப்படத்தில் நடித்துள்ளார்.
உடனடியாக சந்திரசேகர் தன்னுடைய PRO-வை அழைத்து, பிரிந்து சேர்ந்த தம்பதிகள் 10 பேரை தயார் செய்யும்படி கூறி இருக்கிறார். அவர்களை விஜயின் முன் அழைத்து வந்து மாலை மாற்றிக்கொள்ள சொல்லி அதை ப்ரோமோஷனாக வைத்து படத்தினை ஓட்டி இருக்கிறார். படமும் சூப்பர் ஹிட் வெற்றியடைந்துள்ளது. அப்படம் தான் பிரியமானவளே.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.