பிரபலத்தின் வளைகாப்பில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் – விலை உயர்ந்த கிப்ட்!

Author:
30 September 2024, 11:55 am

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக கோட் திரைப்படத்தில் அவர் நடித்த முடித்தார். இந்த நிலையில் தளபதி விஜய் பிரபல பாடலாசிரியரான விவேக்கின் மனைவியின் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு அவர்களுக்கு விலை உயர்ந்த கிப்ட் ஒன்றை பரிசாக வழங்கி அவர்கள் இருவரையும் வாழ்த்தினார்.

Vijay

அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் திரைப்படத்தில் பாடல்களை எழுதியதன் மூலமாக விவேக் பாடல் ஆசிரியராக மாறினார். 36 வயதினிலே, இன்று நேற்று நாளை , இறுதிச்சுற்று, இறைவி, அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், மனிதன், கபாலி, ரெமோ , உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார் .

vivek vijay

குறிப்பாக விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியர்களுள் ஒருவராக விவேக் இருந்து வருகிறார். விஜய் பாடலுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வரும் இவர் விஜயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய விவேக் அப்போதே விஜய்யின் ராசியான பாடலாசிரியராக மனதில் இடத்தைப் பிடித்தார் .

39 வயதாகும் விவேக் சாரதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நட்சத்திரங்கள் எல்லோரும் கலந்து கொண்டு மனைவி வாழ்த்தினார்கள்.

இதையும் படியுங்கள்: “அமரன்” பட விழாவில் நடனமாடிய சாய்பல்லவி… கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கும் சிவகார்த்திகேயன்!

அந்த வகையில் விஜய் உடன் நெருக்கமாக பழகி வரும் பாடல் ஆசிரியர் விவேக்கின் மனைவி வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு அவருக்கு விலை உயர்ந்த பரிசை வழங்கி வாழ்த்தியிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 255

    0

    0