ஜெயிலர் வசூல் பீட் பண்ணிட்டா நான் மீசை சரிச்சிக்கிறேன் – விஜய்க்கு சவால்விட்ட பிரபல நடிகர்!
Author: Shree4 September 2023, 3:24 pm
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததை போலவே உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துது. இதுவரை இப்படம் சுமார் 600 கோடிக்கும் அதிமான வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் வசூலை அடுத்ததாக வெளியாகப்போகும் விஜய்யின் லியோ பீட் செய்யவே முடியாது என பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் அடித்து கூறியுள்ளார்.
லியோ வசூலும் ஜெயிலர் படத்தை போன்று வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது என ஆங்கர் கூற ஆதங்கத்தில் மீசை ராஜேந்திரன்… அப்படியெல்லாம் இல்லை சார். ஜெயிலர் படத்தை நெருங்க கூட முடியாது லியோ… அப்படி நடந்துவிட்டால் நான் என் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என சவால் விட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக மீண்டும் ரஜினி – விஜய் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Meesai Thappikkuma?
— Rajasekar Russalayan (@iamrajesh_pov) September 4, 2023
October Varai Kaathiruppom…🤣#Leo pic.twitter.com/ZUQxBFwQ1I