த்ரிஷாவுடன் காதல்.. மனைவியுடன் விவாகரத்து?.. தில்லாக மேடையில் பேசிய விஜய்..!

Author: Vignesh
28 June 2024, 4:56 pm
Vijay - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக பார்க்கப்படும் விஜய் மனைவியை பிரிந்து த்ரிஷாவுடன் லிவிங் டு கெதரில் இருக்கிறார் என்றும், சமூக வலைதளங்களில் சமீப காலமாக வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் சில தினங்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார்.

Vijay - Updatenews360

அப்போது, த்ரிஷா விஜயுடன் தனியாக லிப்டில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து, பல்வேறு விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைத்தது வந்தது. தற்போது, தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Vijay - Updatenews360

அப்போது மேடையில் பேசிய விஜய், சமூக வலைதளங்களில் நல்லது, கெட்டது என்று ஒப்பீனியன் கேக்குறாங்க அதெல்லாம் பாத்தீங்கன்னா, ஒரு நல்ல விஷயத்தை கெட்டதாகவும், ஒரு கெட்ட விஷயத்தை நல்லதாகவும் காட்டுவதை சோசியல் மீடியா பக்கத்தில் பார்த்து இருப்போம். நீங்கள் எல்லாமே பாருங்க எல்லாத்தையும் படிங்க ஆனா எது உண்மை என்பதை மட்டும் ஆராய்ந்து பாருங்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

Vijay - Updatenews360

சமீபத்தில் சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக பேசப்படும் கருத்துக்களுக்கு அவர் மறைமுகமாக பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் எக்ஸ் பதிவில் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, விஜய் மனைவி சங்கீதா அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று பிரபல பத்திரிகையாளர் யூடியூப் சேனலில் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 59

0

0

Leave a Reply