யாரு சொன்னா அப்டினு.. அஜித்துக்கு போன் போட்ட விஜய்.. காரணம் என்ன தெரியுமா?
Author: Hariharasudhan31 January 2025, 1:28 pm
கார் ரேஸ் வெற்றிக்கு முதலில் வாழ்த்து கூறியதே விஜய் தான் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளரான சுரேஷ் சந்திரா, தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில், “கொஞ்சமும் ஆதாரம் இல்லாத தகவல் அது. அஜித் சார் ரேஸில் வெற்றி பெற்றதுமே விஜய் சாரிடம் இருந்து முதல் வாழ்த்து வந்தது. அதேபோல், அஜித் சாருக்கு விருது (பத்ம பூஷன்) அறிவிக்கப்பட்டதும், விஜய் சாரிடமிருந்து வாழ்த்து வந்தது.
அவர்கள் இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது. எனவே, விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளியும் உண்மையில்லை” எனக் கூறியுள்ளார். தற்போது, இந்தச் செய்தி, விஜய் – அஜித்குமார் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னதாக, துபாயில் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமாரின் அணி, 24H கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்து பாராட்டுக்களைக்குவித்தது. மேலும், வரும் அக்டோபர் வரை அஜித்குமார் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்து உள்ளார். அதன் பின்னர் நடிப்பில் இறங்குவார் என கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அஜித்திற்கு விருது அறிவித்ததும், திரையுலகில் இருந்து பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். அதேபோல், கார் ரேஸ் அணி வெற்றி பெற்றதும் அரசியல், திரைத்துறையினர் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த இருவெற்றியிலும், விஜய் அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கடிந்து வந்தனர்.
இதையும் படிங்க: உசுரே நீதானே.. அழைத்த பாலிவுட்.. மகிழ்ச்சியில் மகா கும்பமேளா மோனலிசா!
காரணம், விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியையும் நடத்தி வருகிறார். அதேநேரம், எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்னும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதேபோல், விடாமுயற்சி என்ற திரைப்படம் அஜித்குமார் நடிப்பில் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.