விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் இன்று 19ஆம் தேதிக்கு திரைக்கு வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது.
டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை அடுத்தடுத்து தமிழக அரசு நிராகரித்தது.
இதனால், இன்று முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்துள்ள லியோ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், தூணிவு படத்தில் மாலில் எப்படி அஜித் மூன் வாக் போட்டு ஆட்டம் போடுவாரோ அதேபோல் லியோ படத்தில் விஜய் மூன் வாக் போட்டு ஆட்டம் போட்டு உள்ளார். ஆனால் அஜித்தின் மூன் வாக்கைவிட விஜயின் மூன் வாக் கேவலமாக இருப்பதாக கூறி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும், காப்பி அடிக்கலாம் இப்படி மொக்கை வாங்கவா காப்பி அடிப்பீங்க என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
This website uses cookies.