என் காதலி இவர் தான்… கை பிடித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் தேவர்கொண்டா- சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி!
Author: Shree30 August 2023, 10:30 am
நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இதற்காக சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்து ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக காதல் கிசு கிசு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
இருவரும் காட்டி வரும் நெருக்கம் உண்மையிலே காதலிப்பதாக செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா தனது காதலை உறுதி படுத்தியிருக்கிறார்.
இளம் பெண் ஒருவரின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு ” உண்மையிலே இது ஸ்பெஷலானது விரைவில் அறிவிக்கிறேன் என கூறி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டுள்ளார். இது சமந்தாவாக இருக்கோமோ என அவரது ரசிகர்கள் அதிந்துப்போய் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இது ராஷ்மிகாவா? இல்ல சமந்தாவா? யூகித்து வருகிறார்கள்.