திருமணத்தில் இணையும் அடுத்த நட்சத்திர ஜோடி… தீயாய் பரவும் தகவல்..!!
Author: Udayachandran RadhaKrishnan21 November 2024, 6:06 pm
சினிமா பிரபலங்கள் திரையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் ஒன்று சேர்வது வழக்கமான ஒன்றுதான்.
காதல் விஷயத்தை பொத்தி பொத்தி வைத்து வரும் இளம் ஜோடியினர் தற்போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
காதலை உறுதி செய்த விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகா காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அது உண்மை என பல புகைப்படங்களும் வெளிச்சம் போட்டு காட்டின.

ஆனால் இது குறித்து இருவரும் மறுக்கவும் இல்லை, அதை பற்றி வாய் திறக்கவும் இல்லை. இந்த நிலையில் சஹிபா இந்தி ஆல்பம் பாடலில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா தற்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது காதல் குறித்து மனம் திறந்து பேசினார்.
இதையும் படியுங்க: மேடையில் பிரபல நடிகையை தள்ளி விட்டு நடிகருடன் நெருக்கம் காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் : வைரல் வீடியோ!
அதில், நான் சிங்கிள் ஆக இருப்பேன் என நினைக்கிறீர்கள்? எனக்கு வயது 35 ஆகுது.. என்னுடைன் நடித்த சக நடிகையை நான் டேட்டிங் அழைத்து சென்றேன், எனக்கு காதல் என்றால் என்னவென்று தெரியும், எனது காதல் unconditional ஆன காதல் இல்லை, சில கண்டிஷன்கள் உள்ளது என கூறியுள்ளார்.

இதன் மூலம் விஜய் காதலில் விழுந்து உண்மைதான் என கூறியுள்ளார். அது ராஷ்மிகாவா என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யாத விஷயம் மட்டுமே. ஆனால் அவர் நடிகையை காதலிக்கிறார் என்பது மட்டும் நிஜம்.