இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி குறித்து அப்போதே கிசுகிசுக்கள் வெளியானது. அதில் இடம்பெற்ற இன்கேம் காவாலே என்கிற பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. இதனால் இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்படும்.
ஆனால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை. இந்நிலையில் இந்த ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும். வருகிற பிப்ரவரி மாதம் வருகிற நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி தீயாய் பரவியது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள விஜய் தேவர்கொண்டா, எனது திருமணம் குறித்து வெளிவரும் செய்தியில் உண்மையில்லை. வருடத்திற்கு ஒரு முறை எனக்கு ஊடகங்கள் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களாகவே இது போன்ற செய்திகளால் என்னை திருமணம் செய்துக்கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள் என அவர் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
This website uses cookies.