ஹைதராபாத்தை சேர்ந்த ஹேண்ட்ஸம் ஹீரோவான விஜய் தேவர்கொண்டா தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். நல்ல அழகு, தோற்றம் , உயரம் என Crush மெட்டீரியலில் இருக்கும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர்.
இவர் 2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் காமெடி திரைப்படமான நுவ்விலா படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதையடுத்து 2016 பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த காதல் காமெடி படமான பெல்லி சூப்புலு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
மிகவும் குறுகிய காலத்திலே அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற விஜய் தேவர்கொண்டா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், அர்ஜுன் ரெட்டி , மகாநடி, கீத கோவிந்தம் , டாக்ஸிவாலா, டியர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக சமந்தாவுடன் குஷி திரைப்படத்தில் நடித்து அவருடன் தொடர்ச்சியாக காதல் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐஸ் குளியல் போட்டு வீக் எண்ட் ஜில் பண்ண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சமந்தா எங்க இருக்காங்க? உங்க கூடாதானா? என சந்தேகத்துடன் கேட்டு வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.