ஒரே ரூமில் விவாகரத்தான நடிகையுடன் தங்கிய விஜய்?.. அப்போ அவங்க வாழ்க்கை..!
Author: Vignesh15 March 2023, 6:45 pm
நேஷ்னல் க்ரஷ் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகை ராஷ்மிகா மந்தனா க்ரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வருகிறார். அவருடன் அவ்வப்போது டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. இது இப்படி இருக்கும் போது தற்போது குஷி என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படம் ஸ்ரீநகரில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் உமர்சந்து சமந்தா நாக சைதன்யா விவாகரத்து குறித்து பல அதிர்ச்சியூட்டும் விஷயங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுததியது.
இதனிடையே, உமர்சந்து மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாகவும், விஜய் தேவரகொண்டா சமந்தாவை மீது காதல் வயப்பட்டு, இவர்கள் இருவரும் ஒரே ரூமில் தங்கி வருவதாக ஒரு புதிய சர்ச்சையை தொடங்கியுள்ளார்.
ஆனால், இது வெறும் பொய்யான தகவல் என்றும் இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விமர்சகர் உமைர் சந்து இப்படி அடுத்தவர் வாழ்க்கையில் விளையாடுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.