சூர்யாவின் கம்பீர குரல்…மிரட்டிய விஜய் தேவர்கொண்டா பட டைட்டில் டீசர்…!

Author: Selvan
12 February 2025, 9:10 pm

சூர்யாவின் குரலில் கிங்டம்

தெலுங்கு சினிமாவில் ‘நுவ்விலா’ என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா வாழ்கையை தொடங்கியவர் விஜய் தேவர்கொண்டா,அதன் பிறகு பெல்லி சுப்புலு,எவடே சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படியுங்க: தனுஷ் ரூட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…திடீரென எடுத்த முடிவு…ஒர்க் அவுட் ஆகுமா.!

இவர் கடைசியாக கல்கி படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.இந்த நிலையில் தற்போது ஜெர்சி படத்தை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்கத்தில்,தன்னுடைய 12 வது படத்தில் நடித்து வருகிறார்.

Vijay Deverakonda Kingdom movie

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில்,விஜய் தேவர்கொண்டாவுடன் பாக்யாஸ்ரீ போஸ்,கேசவ் தீபக்,ஸ்ரீ ராம் ரெட்டி,ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘கிங்டம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது,இப்படத்திற்கு தமிழில் சூர்யாவும்,தெலுங்கில் என்டிஆரும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வருகிற மே மாதம் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

  • Ilayaraja says Bhavatharini மேடையில் கண்கலங்கிய இளையராஜா.. பவதாரிணி பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு!
  • Leave a Reply