என்னம்மா வர்ணிக்கிறார் மனுஷன்.. மிருணாள் தாகூரை வர்ணித்த விஜய்..!
Author: Vignesh3 April 2024, 7:17 pm
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

மேலும் படிக்க: நலங்கு வைக்க 2 கோடி செலவாச்சா?.. மகள் திருமணம் குறித்து கடுப்பான ரோபோ ஷங்கரின் மனைவி..!(வீடியோ)/
தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், முதல்முறையாக ஃபேமிலி ஸ்டார் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் ஜோடியாக நடித்துள்ளார். ஏப்ரல் ஐந்தாம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா மிருணாள் தாகூர் குறித்து பேசியுள்ளார்.
மேலும் படிக்க: மேடம் மேடம் ஒரு போட்டோ மேடம்.. பாலிவுட் நடிகைகளை கலாய்த்த சின்னத்திரை நடிகை..! (வீடியோ)
அதில், நான் திரைப்படங்களை குறித்து நினைக்கும் முன்பில் இருந்தே மிருணாள் தாகூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இளம் வயதிலிருந்து பணியாற்றி வருகிறார். எதையும் எளிதில் கற்றுக் கொள்வார். உங்களுக்கு அருமையான முகம் என அடிக்கடி கூறி வருந்தேன். அவர் அதிகம் பேசாவிட்டாலும், நம்மால் எமோஷனை உணர முடியும். அவரின் மூக்கு, உதடுகள், கண்கள் அமைந்த விதம் அதில், ஏதோ இருக்கிறது. அவருக்கு மொழி தெரியாவிட்டாலும், முகத்தில் எமோஷன்கள் வருகிறது என்று விஜய் தேவரகொண்டா மிருணாள் தாகூரை வர்ணித்தும் புகழ்ந்தும் பேசியுள்ளார்.