பெருசு நம்பி ரூ.500 கோடி நாசமாக்கிட்டாங்க…. எங்க ஊர்ல ரஜினி ஜீரோ – விஜய் தேவர்கொண்டா சர்ச்சை பேச்சு!

Author: Shree
22 August 2023, 2:16 pm

தமிழ் சினிமாவில் சில நல்ல படங்கள் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவது போன்றே சில தோல்வி படங்கள் வெளியாவதும் வழக்கம். எல்லோரும், எல்லா சமயத்திலும் வெற்றிகளையே கொடுக்க முடியாது. சில நேரங்களில் சில தோல்விகளை சந்தித்து தான் கடந்துச்செல்லவேண்டும். ஆனால், இதனை சிலர் ஏற்றுக்கொள்ளமுடியாமல் தோல்வி பட நடிகர்கள் மீது வெறுப்பை திணித்து வருகிறார்கள்.

தற்போது அப்படித்தான் பிரபல ஹீரோவான நடிகர் விஜய் தேவர்கொண்டா சூப்பர் ஸ்டார் ரஜினியை குறித்து மோசமாக விமர்சித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் தேவர்கொண்டா தமிழ் ரசிகர்களுக்கும் பேவரைட் ஹீரோ தான். இருக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

தற்போது சமந்தாவுடன் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஜய் தேவர்கொண்டா, ரஜினி தொடர்ச்சியாக 6 தோல்வி படங்களை கொடுத்துள்ளார். இப்போ வேற ரூ. 500 கோடியில் ஜெயிலர் படம் வெளியாகிறது. என கூறி விமர்சித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரஜினி ரசிகர்களை கடுங்கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!