விஜய்யின் அரசியல் பாய்ச்சல்.. தளபதி MGR -ன்னா- அப்போ ஜெ திரிஷா தான்.. கலாய்க்கும் பிரபலம்..!
Author: Vignesh8 June 2023, 5:00 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதி பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
நடிப்பை தாண்டி விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிதும் விரும்பினார். அதற்காக எஸ்.ஏ.சி ரசிகர் மன்றம் துவங்கினார். 90களின் ஆரம்ப காலங்களில் விஜய் நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே ரசிகர் மன்ற கொடியேற்றுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது என அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. அதற்கு தலைவராக இருந்தவரும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.
2009ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதில் மக்களுக்கு சேவை செய்தல், நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது . அதையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தான் செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் முழு கட்டுப்பாடுமே எஸ்.ஏ.சி கையில்தான் இருந்தது. ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசியது இல்லை.
சிறிது காலமாக விஜய் குறித்து அதிகப்படியான கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றாக கீர்த்தி சுரேஷ் குறித்து வந்த கிசு கிசு சொல்லலாம் இதனால் வருத்தமடைந்த கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினர் இது குறித்து வெளிப்படையாக பேசி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதனிடையே, திரிஷா குறித்தும் அதிகப்படியான கட்டுக்கதைகளும் இணையதளத்தில் வந்த வண்ணம் உள்ளன. இதனுடைய விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்து திரிஷாவை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது உண்மையில்லை என்றாலும், மேலும் விஜய் அரசியல் பிரவேசத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாலும் இது குறித்து அவருடைய நற்பெயருக்கு கலங்கம் விளைவுக்கும் வகையில் பல பேர் இவ்வாறு செய்து வருவதாகவும் இவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் ஒரு டீம் விஜய்யை அரசியல் பிரவேசத்திற்கு உசுப்பேத்தி விஜய் எம் ஜி ஆர் ஆனால் ஜெயலலிதா திரிஷா என்றும் இந்த திருமண இந்த ஜோடி திருமண மேடையில் விரைவில் சங்கமம் ஆகிறது என்றும் பூத் கமிட்டி வரை தயாராக உள்ளதாகவும், அரசியல் வாரிசாக பிராமண பொண்ணு தயார் என்றும் ஜோடி எப்படி என்று பிரபல பத்திரிகையாளர் கடுமையாக கேலி செய்யும் வண்ணம் பதிவிட்டு உள்ளார். மேலும், விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல்களை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.