ஆசையா கேட்டும் அம்மாவுக்காக அதை செய்யாத விஜய் – நடிகரா இருந்தும் வேஸ்ட்!

Author: Shree
17 March 2023, 9:28 pm

நடிகர் விஜய் சில நாட்களாகவே தன் அப்பம்மா அம்மாவை சரியாக பார்த்துக்கொள்வதில்லை. அவர்களை யாரோ மூன்றாவது மனுஷரை போன்று நடத்துகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

அவ்வப்போது அதை நிரூபிக்கும் வகையில் அவரது திரைப்பட விழாக்களில் கூட நடந்துக்கொள்வார். இதனால் சில யூடியூப் சேனல்கள் அவரது அப்பா, அம்மாவிடம் நேர்காணல் எடுத்து அவர்களது உறவின் ஆழத்தை பற்றி கேட்டறிந்து வருகிறார்கள்.

அப்படித்தானே அண்மையில் ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றில், நான் என் மகன் விஜய்யின் ஏதாவது ஒரு படத்தில் அவருக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டேன். லியோ திரைப்படத்தில் கூட உனக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு இருந்தால் சொல்லு என விஜய்யிடம் கேட்டாராம்.

அதற்கு விஜய் ப்ளீஸ் மா அது மட்டும் முடியாது. என்கூட நடிக்கிற ஆசை மட்டும் விட்டு விடுங்க என்றாராம். காரணம் உங்கள பாத்தாலே எனக்கு சிரிப்பு வந்துடும் என்னால நடிக்க முடியாது என கூறி சிரித்ததாக அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!