விஜய் Vs உதயநிதி அடுத்த முதல்வர் யார்? அடித்துக்கொண்டு களமிறங்கும் நெக்ஸ்ட் ஜெனரேஷன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதில் பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

நடிப்பை தாண்டி விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிதும் விரும்பினார். அதற்காக எஸ்.ஏ.சி ரசிகர் மன்றம் துவங்கினார். 90களின் ஆரம்ப காலங்களில் விஜய் நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே ரசிகர் மன்ற கொடியேற்றுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது என அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. அதற்கு தலைவராக இருந்தவரும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.

2009ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதில் மக்களுக்கு சேவை செய்தல், நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது . அதையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தான் செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் முழு கட்டுப்பாடுமே எஸ்.ஏ.சி கையில்தான் இருந்தது. ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசியது இல்லை.

2009ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதில் மக்களுக்கு சேவை செய்தல், நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது . அதையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தான் செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் முழு கட்டுப்பாடுமே எஸ்.ஏ.சி கையில்தான் இருந்தது. ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசியது இல்லை.

விஜய் மக்கள் இயக்கம் கலைந்தது ஏன்?

பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்தது. முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென விஜய் தலையிட்டு இதற்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என விளக்கினார்.

மீண்டும் விஜய் அரசியல் பிரவேசம்:

பின்னர் தற்போது மீண்டும் விஜய் தரப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வாசம் அடிக்கிறது. ஆம், அண்மையில் கூட அம்பேதகர் பிறந்தநாள் அன்று அவருடைய சிலைக்கு தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் மாலை அணிவித்தார். அண்மையில் கூட, +2 , 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகை வழங்க உள்ளார் நடிகர் விஜய். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

இதற்காக மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டார். இதில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், ‘ஆதார்’ அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார். .

இந்நிலையில் வரும் 17ம் தேதி அன்று மாணவர்களை விஜய் சந்திக்கிறார்.அப்போது தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்போகிறார். இந்த விழா
சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறுவதாகவும், அந்த விழாவில் கலந்துக்கொள்பவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்போவதாக திட்டமிட்டுள்ளனர். இதற்காக நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று சந்தித்ததாக தகவல் வெளியாகியது.

விஜய் Vs உதயநிதி அரசியல்:

இப்படி விஜய் அரசியலில் தீவிரமாக இயங்கியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அரசியல் பலம் கொண்ட உதயநிதி ஜெயிக்கிறாரா? அல்லது எம்ஜிஆர் போன்ற ரசிகர்கள் பலம் கொண்ட விஜய் ஜெயிப்பாரா? என விவாதங்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த அரசியலில் விஜய் எம்ஜிஆர் என்றும் நடிகை திரிஷா தான் அடுத்த ஜெயலலிதா என்றும் நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர். அத்துடன் இந்த ஜோடி திருமண மேடையில் விரைவில் சங்கமிக்கிறது என்றும் பூத் கமிட்டி வரை தயாராக இருப்பதாகவும் அரசியல் வாரிசாக பிராமண பெண்ணும் தயார், ஜோடி எப்படி என்று பிரபல பத்திரிக்கையாளர் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு திரிஷாவை இரண்டாம் திருமணமும் செய்யவுள்ளதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். இது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

Ramya Shree

Recent Posts

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

1 hour ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

2 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

3 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

3 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

4 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

5 hours ago

This website uses cookies.