நடிகைகளுக்கு இருக்கும் தைரியம் கூட விஜய்க்கு இல்லையா? இணையத்தில் வைரலாகும் ஷாக் சம்பவம்!
Author: Vignesh26 September 2023, 1:45 pm
தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது, பல நட்சத்திரங்கள் திருமணம் செய்த செய்திகள் வருகிறதோ இல்லையோ நடிகர் நடிகைகளின் விவாகரத்து செய்து அதிகமாகவே வருகிறது. அந்தவகையில், அமலா பால், சமந்தா, தனுஷ் – ஐஸ்வர்யா, பாலா, இமான் போன்ற நட்சத்திரங்களின் விவாகரத்து அதிகாரப்பூர்வமாகவே தகவல்கள் வெளியாகின.
ஆனால், நயன்தாரா, நடிகை சினேகா விவாகரத்து செய்ய இருப்பதாக, கண்டபடியான வதந்தி செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை நயன்தாரா மற்றும் சினேகா தங்கள் கணவர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனால், நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து குறித்து எதையும் கூறாமல், இணையத்தில் கண்டபடி பலர் பல செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் விஜய் ஏன் இதை செய்யாமல் இருக்கிறார் என்று சினிமா விமர்சகர்கள் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.