விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்? – உண்மையை போட்டு உடைத்த குடும்பத்தினர்..!

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி குறித்து அப்போதே கிசுகிசுக்கள் வெளியானது. அதில் இடம்பெற்ற இன்கேம் காவாலே என்கிற பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. இதனால் இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்படும்.

அந்தவகையில் தற்போது ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா இருவரும் தங்களது உடையை மாற்றி மாற்றி அணிந்து வெளியில் சென்ற புகைப்படங்கள் இணையவாசிகளிடம் சிக்கி வைரலாகி வருகிறது. ஆனால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை. ஆனால், தற்போது இதற்கு மேல் மறைக்கவே முடியாது என முடிவெடுத்துள்ள இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக, தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் உலா வந்தது.

இந்நிலையில், இது குறித்து விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினர் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த செய்திகள் அனைத்தும் தவறானது என அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், இது போன்ற எந்த முடிவுகளும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Poorni

Recent Posts

லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…

24 minutes ago

பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் உட்காருவதும் ஒன்ணுதான் : பரபரப்பை கிளப்பிய திமுக பேச்சாளர்!

பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…

60 minutes ago

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

3 hours ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

3 hours ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

3 hours ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

4 hours ago

This website uses cookies.