“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?
Author: Prasad7 April 2025, 5:51 pm
மரண வெயிட்டிங் மாமே
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தியில்லாத அஜித் திரைப்படமாக அமைந்தது. ஆதலால் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு மிகுந்த ஆவலோடு அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அட்டகாசமான டிரைலர்
“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஒரு டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக டிரைலரை பார்க்கையில் தெரிய வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் வசனத்தை பேசும் அஜித்

விஜய் தனது அரசியல் மேடையில் பேசி மிகப் பெரிய கைத்தட்டல் வாங்கிய வசனம்தான் “வாட் ப்ரோ”. இந்த நிலையில் இந்த வசனத்தை அஜித்குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த வசனத்தை இடைவேளை காட்சியாக வைத்துள்ளார்களாம். இவ்வாறு விஜய்யின் வசனத்தை அஜித் பேசியிருப்பதாக வெளியாகும் தகவல் விஜய் ரசிகர்களை சற்று கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
