தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. திரைஇப்படம் படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இருந்தாலும் விமர்சனத்தில் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை. உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.540கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச தொடக்க நாளில் வசூல் செய்த இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துக்கொண்ட ரசிகை ஒருவர் பரபரப்பு புகார் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். அதாவது நான் VIP டிக்கெட் வாங்கி வந்தேன். ஆனால் என்னை உள்ளே நுழைய விடமாட்றாங்க. கேட்டால் கூட்டம் அதிகமாக இருக்கிறது என கூறுகிறார்கள். அதற்கு ஏன் இத்தனை டிக்கெட் விற்பனை செய்யவேண்டும்? என கேள்வி எழுப்பியதோடு அதற்கு முறையான பதில் அளிக்க சொல்லி புகார் கொடுத்துள்ளார்.