விஜய் இனிமேல் நடிக்க மாட்டாரா? ஏன்? கலங்கி அழுத குட்டி ரசிகர் – வைரலாகும் வீடியோ!

Author: Rajesh
3 February 2024, 1:56 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

Vijay - Updatenews360

இந்நிலையில் நேற்று “தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். மிக விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறப்படுகிறது. இந்த விஷயம் அவரது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்தவகையில் விஜய்யின் குட்டி ரசிகன் ஒருவன் தன்னுடைய அம்மா விஜய் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டாராம் என சொல்ல, அதற்கு அந்த குட்டி பையன் , ”ஏன் நடிக்க மாட்டாரு, என்ன ஆச்சு” என கேட்டு அழுகிறார். அவரோட பாட்டுக்கு எல்லாம் இனிமேல் நீ டான்ஸ் ஆட முடியாது என அம்மா சொல்ல, அந்த குட்டி ரசிகர் கலங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 310

    0

    0