அட்லீ மீது செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்… மறைந்த நடிகையின் வீடியோவை டிரெண்ட் செய்து விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
24 February 2023, 4:42 pm

தமிழ் சினிமாவின் உச்சநிலை நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் இன்னும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். தற்போது, வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, வெற்றி இயக்குநர் வரிசையில் இடம்பிடித்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் இந்தப் படத்தின் டைட்டில் மட்டும் கிளம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போலவே, ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு ஸ்டெயிலை பயன்படுத்துவது உண்டு. இதற்கென அவரது இயக்குநர்கள் மெனக்கெடுவது உண்டு.

அப்படித்தான் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான தெறி படத்தில், செண்டர் ஃபிரஸ் சிவிங்கத்தை கையில் வைத்து ஸ்டைலாக வாயில் போடுவதை விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். அப்படத்தைத் தொடர்ந்து, பிகில், மாஸ்டர், வாரிசு படம் உட்பட பல படங்களில் அந்த ஸ்டைலை காமித்து இருப்பார்.

ஆனால், விஜய்க்கு முன்பாகவே மறைந்த நடிகை செளந்தர்யா தெலுங்கு படம் ஒன்றில் அதுபோன்ற ஸ்டைலில் சிவிங்கத்தை வாயில் போட்டுள்ளார்.

படத்தின் கதைகளை காப்பி அடிக்கும் அட்லீ, இந்த ஸ்டைலயும் விட்டு வைக்கவில்லையா..? என்று கிண்டலடித்து வருகின்றனர். அதேவேளையில், சச்சின் படத்திலேயே விஜய் இதை செய்திருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!