தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் பல வெற்றிப்படங்களை கொடுத்து டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர். அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் படங்களை எடுத்துப்பதில் திறமைமிக்கவர் இயக்குனர் மிஸ்கின்.
இதயம், காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்களின் இயக்குநரான கதிரிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றி சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே ஏகோபித்த வரவேற்பை பெற்ற மிஷ்கின் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல்வேறு விசித்திரமான படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவர், எதார்த்தமான பேய் படங்களையும் திரில்லர் படங்களையும் எடுத்து பிரபலமானவர். மிஸ்கின் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். எப்போதும் மிஸ்கின் விழாக்களின் மேடையில் பேசும் போது சில சர்ச்சை கருத்துக்களோடு பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
இதனிடையே, லியோ படத்தில் நடிகர் மிஸ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் குறித்தும் லியோ படத்தை விஜய் பார்த்து விட்டதாகவும் பத்திரிகையாளரிடம் தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் மிஸ்கின் விஜய்யை ஒருமையில் பேசியதாக கூறி தளபதி ரசிகர்கள் சார்பாக மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவுகெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.