சினிமாவிற்கு டாட்டா காட்டும் விஜய்… கடைசி படம் இது தான் – பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

Author: Shree
3 July 2023, 12:55 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் தற்போது நடிப்பை தாண்டி அரசியலில் இறங்கி அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார். அண்மையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நடிகர் விஜய்யே தனது கைகளால் சான்றிதழ் மற்றும் ரூ.5000 ஊக்கத்தொகையையும் வழங்கி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தனி ஒரு ஆளாக அரசாங்கம் செய்த சலுகை போன்று அவர் நடத்திய இந்த விருது விழா அரசியல்வாதிகளையே அசைத்துப்பார்த்தது. இதற்காக விஜய்க்கு பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

இதனிடையே விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்படியான நேரத்தில் விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடையும் வகையில் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் லியோ படத்தை அடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து நடிக்க உள்ளார். அந்த படத்தை முடித்த கையோடு 2, 3 ஆண்டுகள் நடிப்பதை நிறுத்தி அரசியலில் ஈடுபாடு காட்ட இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேலை அரசியல் அவருக்கு செட் ஆகிவிட்டால் சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு முழு நேர அரசியலில் இறங்கிவிடுவாராம். அப்படி இல்லையெனில் 3 ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் நடிக்க வருவார் என தகவல்கள் கூறுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 602

    0

    0