வாரிசு படம் வெற்றிபெற தோப்புக்கரணம்: விஜய் ரசிகர்கள் தூதன முறையில் பிராத்தனை.. வைரலாகும் போட்டோஸ்..!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 4:00 pm

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

Varisu_UpdateNews360

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன்.இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், வாரிசு படம் குடும்ப ரீதியான பாடமாக இருப்பது போன்று அமைந்துள்ளது. விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

Varisu_UpdateNews360

பொங்கலுக்கு வாரிசுடன் வெளியாகும் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, வாரிசு படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கப் போகிறது..? நல்ல படமாக இருக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வேண்டி கொண்டிருந்தனர்.இந்த நிலையில் இரு படக்குழுவினரும் அவரவர் படங்களை ப்ரோமோஷன் செய்வதில் குறியாக உள்ளனர். குறிப்பாக வாரிசு இசை வெளியிட்டு விழா, துணிவு படத்திற்கு வானத்தில் இருந்து விழா, குதிப்பது என இருந்து வந்தனர். ரசிகர்களும் கடலுக்கடியில் போஸ்டர் வைப்பது, பழனிக்கு காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, போஸ்டர் அடிப்பது என இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெற்றிபெற வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் தூதன பித்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Varisu_UpdateNews360

இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்கள் மயூரநாதர் கோயிலில் 108 தோப்புக்கரணம் போட்டு பிராத்தனை செய்தனர். மேலும் கோயிலில் மக்களுக்கு உணவு வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 579

    0

    0