விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரகாஷ்ராஜ்..வைரலாகும் வீடியோ..குஷியில் ரசிகர்கள்..!

Author: Selvan
27 November 2024, 1:59 pm

விஜய் ரசிகர்களின் புதிய வீடியோ:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயின் “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” (GOAT) திரைப்படம் சமீபத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.

Vijay GOAT movie viral dance video

தற்போது விஜய் ரசிகர்கள், சமீபத்தில் இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர், இது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “வேட்டையன்” திரைப்படத்தின் விமர்சன நிலை மற்றும் வசூல் பற்றிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: “லப்பர் பந்து”படத்தால் இயக்குனருக்கு நடந்த ஏமாற்றம்..கூட இருந்தே குழி பறித்த தயாரிப்பாளர்..!

மேலும், சூர்யா நடிப்பில் வெளியான “கங்குவா” திரைப்படமும் பல எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு பலப்பரிமாணங்களில் தோல்வியடைந்ததாகவும், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தின் நிலையும் இதுவரை தெரியவில்லை எனவும், அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் பிரகாஷ்ராஜ் நடனமாடும் காட்சியுடன் “தி கோட்” படத்தில் வரும் “மட்ட மட்ட” பாடலை மீம்ஸ் ஆக்கி வெளியிட்டுள்ளனர்.விஜயின் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 158

    0

    0