அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்காத ‘பீஸ்ட் ‘ கவலையில் விஜய் ரசிகர்கள்..!!??

Author: kavin kumar
14 April 2022, 4:05 pm

நடிகர் விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் முந்தைய படங்களுக்கு இல்லாத அளவுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த நிகழ்வுகளும் நடந்தன. தொடர்ந்து இரண்டு நாட்களாக இணையதளங்களில் விஜய்யின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது .ஆனால் இந்தப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பொதுவாக தளபதி விஜய் படம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் , கதை களம் அமைந்திருக்கும். முந்தையதாக இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மாக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .

பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது . பொதுவாக நடிகர் விஜய்க்கு எப்போதும் சிங்கப்பூரில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். தளபதி விஜயின் படங்களுக்கு என்றுமே பெரிய வசூல் அந்த பகுதியில் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் முதல் நாள் 3.2 லட்சம் டாலர்கள் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைபடம் 3.7 லட்சம் டாலர்கள் முதல் நாளில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பீஸ்ட் படம் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர் .

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்