என் வாழ்க்கை சூனியமாக போய்… அவர் இப்படிபட்டவர் தான் : பல உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கிய விஜய் அப்பா..!

Author: Vignesh
6 January 2023, 10:07 am

பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.

அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக விஜய் தன் தாய் தந்தையை கைவிட்டுவிட்டார் என்றும் பெற்றோர்களுக்கும் விஜய்க்கும் இடையில் பிரச்சனை என்றும் விமர்சிக்கப்பட்டும் கூறப்பட்டும் வருகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகர் விஜய்யின் அம்மா அப்பா இருவரும் எங்கும் தன் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் தனியார் இணையதள பேட்டியில் விஜய் மற்றும் அவரது மனைவி ஷோபாவை பற்றி எஸ் ஏ சி பேசியுள்ளார்.

s a chandrasekhar - updatenews360

தனக்கு சினிமாவில் பெரியதாக நண்பர்கள் கிடையாது என்றும், தனக்கு நண்பன், மகன் எல்லாத்துக்கும் முதலுமாய் இருப்பது விஜய் தான் என்றும், மேலும் விஜே அர்ச்சனா மனைவி ஷோபா இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.

shoba chandrasekhar vijay - updatenews360

அதற்கு பதில் அளித்த எஸ் ஏ சி, அவள் இல்லை என்றால் என் வாழ்க்கை சூனியமாக போயிருக்கும் என்று ஓப்பனாக தெரிவித்து இருக்கிறார். தனக்கு இப்படியொரு உயர்வு கிடைத்திருக்காது என்றும், தன் படத்தை பார்த்து, வீட்டிற்கு வந்து சொல்லாமல் ஆடியன்ஸ் இருக்கும் போதே என்ன படம் எடுத்து வெச்சிருக்கீங்க என்று கடிப்பாள் என்றும், அந்த பேட்டியில், தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ